ஜப்பான் நாட்டின் ஹக்குட்டோ-ஆர் விண்கலம் மூலம், ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஷிட் ரோவர் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது, ரோவருடன் கூடிய இந்த விண்கலம், நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. மேலும், தனது முதல் நிலவு புகைப்படத்தை அனுப்பி உள்ளது. இந்தப் புகைப்படத்தில், நிலவில் உள்ள மேடு பள்ளங்கள் மிகத் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, அமெரிக்காவில் இருந்து, ஜப்பானின் ஹக்குட்டோ-ஆர் விண்கலத்தில் ராஷிட் ரோவர் செலுத்தப்பட்டது. இது, குறைந்த எரிபொருள் பாதையில் பயணித்து, தற்போது, நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ளது. விரைவில், இது நிலவின் வளிமண்டல அடுக்கில் பயணம் செய்து, இறுதியாக நிலவில் தரையிறங்க உள்ளது. நிலவில் தரை இறங்குவதற்கு, அட்லஸ் கிரேட்டர் என்ற பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிலவில், ராஷிட் ரோவர் தரையிறங்கும் நேரம் மற்றும் நாள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.