டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர், கழிவுநீரகற்று வரி வசூல் 

சென்னையில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர், கழிவுநீரகற்று வரி வசூலிக்கப்பட உள்ளதால்  நுகர்வோர் அட்டை தேவை இல்லை என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்கள் செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையில் ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்க மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் நாளை முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே உள்ள […]

சென்னையில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர், கழிவுநீரகற்று வரி வசூலிக்கப்பட உள்ளதால்  நுகர்வோர் அட்டை தேவை இல்லை என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்கள் செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையில் ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்க மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் நாளை முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்படமாட்டாது.

மேலும் இணைய வழியிலான கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி 'கிரெடிட்' கார்டு, 'டெபிட்' கார்டு மற்றும் 'நெட் பேங்கிங்' மூலமாக செலுத்தலாம். மேலும் யு.பி.ஐ, கியூஆர் குறியீடு மற்றும் பி.ஓ.எஸ். போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu