சவூதி அரேபிய நீதிமன்றம் , சமூக ஊடக பதிவின்மூலம் சமூக ஒற்றுமையை சீர்குலைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணுக்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
சவூதி அரேபியாவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த நூரா பின்ட் சயீத் அல்-கஹ்தானி என்ற பெண் சமூக வலைதளத்தில் சில பதிவுகளை வெளியிட்டார். அப்பதிவுகள் சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதத்தில் இ௫ப்பதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி , அல்-கஹ்தானி தகவல் தொடர்பு மூலம் பொது ஒழுங்கை புண்படுத்தியுள்ளார் என்று ௯றினார். அதைத் தொடர்ந்து அப்பெண்ணிற்கு 45 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அல்-கஹ்தானி என்ன பதிவை வெளியிட்டார் மற்றும் அவரது விசாரணை எங்கு நடைபெற்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்து சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆராய்ச்சி இயக்குனர் அப்துல்லா அலாவுத் ௯றுகையில், அல்-கஹ்தானி தனது கருத்துக்களை ட்வீட் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நடவடிக்கையானது சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் புதிதாக பதவியேற்றுள்ள நீதிபதிகளின் ஆதிக்கத்தின் ஆரம்பமாகத் தெரிகிறது என்று கூறினார்.