நிலவுக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பட்டியல் - நாசா வெளியீடு

நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் நாசா பணியாற்றி வருகிறது. நேற்று, இந்தத் திட்டத்தின் வழியாக நிலவுக்கு பயணிக்க உள்ள விண்வெளி வீரர்களின் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாசாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ரீடு வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா ஹாமக் கோச் ஆகியோரும், கனடாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஜெரமி ஹான்சன் அடங்கிய 4 பேர் குழு ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் […]

நிலவுக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் நாசா பணியாற்றி வருகிறது. நேற்று, இந்தத் திட்டத்தின் வழியாக நிலவுக்கு பயணிக்க உள்ள விண்வெளி வீரர்களின் பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாசாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ரீடு வைஸ்மேன், விக்டர் க்ளோவர், கிறிஸ்டினா ஹாமக் கோச் ஆகியோரும், கனடாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி வீரர் ஜெரமி ஹான்சன் அடங்கிய 4 பேர் குழு ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் நிலவுக்கு பயணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக கனடா விண்வெளி வீரர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். இவர் ஒரு கருப்பின வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, நிலவுக்கு செல்லும் முதல் கறுப்பினத்தவர் என்ற வரலாறு படைக்கப்படுகிறது. அத்துடன், முதல் முறையாக, நிலவுக்கு பயணிக்கும் பெண்ணாக கிறிஸ்டினா இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu