வால்மார்ட் இணைய வர்த்தக கிடங்குகளில் பணியாற்றிய 2000 பேர் பணி நீக்கம்

April 4, 2023

அமெரிக்காவை சேர்ந்த 5 இணைய வர்த்தக கிடங்குகளில், வால்மார்ட் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும், இணைய வர்த்தக விற்பனைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கிடங்குகளில் பணியாற்றி வந்த 2000 பேர் நீக்கப்பட்டுள்ளதாக பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து வால்மார்ட் நிறுவனம் கடந்த மாதம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. தற்போது, அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வால்மார்ட் நிறுவனம், அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வரும் நிலையிலும், வால்மார்ட் […]

அமெரிக்காவை சேர்ந்த 5 இணைய வர்த்தக கிடங்குகளில், வால்மார்ட் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும், இணைய வர்த்தக விற்பனைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கிடங்குகளில் பணியாற்றி வந்த 2000 பேர் நீக்கப்பட்டுள்ளதாக பங்குச்சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து வால்மார்ட் நிறுவனம் கடந்த மாதம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது. தற்போது, அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வால்மார்ட் நிறுவனம், அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வரும் நிலையிலும், வால்மார்ட் நிறுவனம், தேவைகளை உணர்ந்து தங்கள் பணியாளர்களை இடமாற்றம் செய்வதில் முனைப்பு காட்டி வருகிறது. எனினும், தற்போது 2000 பேர் நீக்கப்பட்டுள்ளனர். டெக்ஸாஸ் மாகாணத்தில் 1000 பேரும், பென்சில்வேனியா மாகாணத்தில் 600 பேரும், ப்ளோரிடாவில் 400 பேரும், நியூ ஜெர்சியில் 200 பேரும் நீக்கப்பட உள்ளதாக வால்மார்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கூடுதலாக கலிபோர்னியாவில் பணி நீக்கங்கள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu