வால்மார்ட் விற்பனை மையங்களில் மின்சார வாகன சார்ஜர்கள் அமைக்க திட்டம்

April 7, 2023

அமெரிக்காவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், தனது ஆயிரக்கணக்கான அமெரிக்க விற்பனையகங்களில் மின்சார வாகன சார்ஜர்களை நிறுவ உள்ளதாக கூறியுள்ளது. அமெரிக்காவின் 90% மக்கள், ஏதாவது ஒரு வால்மார்ட் விற்பனையகத்தில் இருந்து 10 மைல்கள் தொலைவுக்குள் வசிக்கின்றனர். எனவே, வால்மார்ட் தனது சொந்த மின்சார வாகன சார்ஜர்களை நிறுவுவது, நிறுவனத்திற்கு லாபகரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் விதமாக, மின்சார வாகனங்களை நோக்கி அமெரிக்க போக்குவரத்து துறை மாற்றம் அடைந்து வருகிறது. அந்த […]

அமெரிக்காவின் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், தனது ஆயிரக்கணக்கான அமெரிக்க விற்பனையகங்களில் மின்சார வாகன சார்ஜர்களை நிறுவ உள்ளதாக கூறியுள்ளது. அமெரிக்காவின் 90% மக்கள், ஏதாவது ஒரு வால்மார்ட் விற்பனையகத்தில் இருந்து 10 மைல்கள் தொலைவுக்குள் வசிக்கின்றனர். எனவே, வால்மார்ட் தனது சொந்த மின்சார வாகன சார்ஜர்களை நிறுவுவது, நிறுவனத்திற்கு லாபகரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் விதமாக, மின்சார வாகனங்களை நோக்கி அமெரிக்க போக்குவரத்து துறை மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில், வால்மார்ட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை மிக முக்கியமான நகர்வாக சொல்லப்படுகிறது. தற்போதைய நிலையில், 5.8% அமெரிக்க வாகனங்கள் மின்சார வாகனங்களாக உள்ளன. அதே வேளையில், 280 அமெரிக்க வால்மார்ட் விற்பனையகங்களில், 1300 மின்சார வாகன சார்ஜர்கள் நிறுவப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu