இந்திய வம்சாவளி சமையல் கலை நிபுணருக்கு மன்னர் சார்லஸ் பட்டமளிப்பில் அழைப்பு

April 8, 2023

அடுத்த மாதம் பிரிட்டனின் புதிய மன்னர் மூன்றாம் சார்லசுக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பதக்கத்தை வென்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலை நிபுணருக்கு அழைப்பு கிடைத்துள்ளது. அவர் பிரிட்டனில் செயல்பட்டு வரும் மூத்த குடிமக்களுக்கான சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மஞ்சு மல்லி என்ற இந்திய வம்சாவளி சமையல் கலை நிபுணர், கொரோனா பரவலின் போது அதிக சேவைகள் […]

அடுத்த மாதம் பிரிட்டனின் புதிய மன்னர் மூன்றாம் சார்லசுக்கு முடிசூட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பதக்கத்தை வென்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமையல் கலை நிபுணருக்கு அழைப்பு கிடைத்துள்ளது. அவர் பிரிட்டனில் செயல்பட்டு வரும் மூத்த குடிமக்களுக்கான சேவை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சு மல்லி என்ற இந்திய வம்சாவளி சமையல் கலை நிபுணர், கொரோனா பரவலின் போது அதிக சேவைகள் செய்துள்ளார். உடலால் மற்றும் மனதால் நலிவடைந்த முதியோர்களுக்கு அவர் உணவு வழங்கி வருகிறார். மேலும், கொரோனா சமயத்தில் தனது சமையலறையை சமையல் கலை பயிற்றுவிக்கும் இடமாக மாற்றி, இணைய வழியில் வகுப்புகள் நடத்தியுள்ளார். அவரது சேவைகளை பாராட்டும் வகையில், 850 பிரிட்டன் அரசாங்க பதக்க பட்டியலில் ஒருவராக இணைக்கப்பட்டுள்ளார். அவருக்கு, மே 6 ம் தேதி வெஸ்ட்மினிஸ்டரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu