தைவானை சேர்ந்த மின்னணு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கான், தெற்கு தைவானில் 820 மில்லியன் டாலர்களை அடுத்த 3 ஆண்டுகளில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இது மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகள் என்று சொல்லப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் மற்றும் இதர மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் ஆகியவை இந்த உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஆப்பிள் கைபேசிகளின் பாகங்களை தயார் செய்து வரும் பாக்ஸ்கான் நிறுவனம், தற்போது அதிகரித்து வரும் மின்சார வாகனச் சந்தையில் முன்னேறி வருகிறது. இந்தத் துறையில் பல்வேறு இலக்குகளை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. மேலும், இதன் மூலம், அதிக வருவாய் ஈட்டவும் திட்டமிட்டுள்ளது.