காளஹஸ்தி கைலாசகிரி மலையில் தீ விபத்து- அரிய வகை மூலிகை செடிகள் நாசம்

April 13, 2023

காளஹஸ்தி கைலாசகிரி மலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கைலாசகிரி மலையில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இந்த மலையில் யானை, மான், சிறுத்தை, மயில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை கைலாசகிரி மலை, பரத்வாஜ் தீர்த்தம், முக்கந்தி கோவில் அருகே சமூக விரோதிகள் மது குடித்து, மழையில் இருந்த சருகுகளுக்கு தீ வைத்துள்ளனர். தீ […]

காளஹஸ்தி கைலாசகிரி மலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி கைலாசகிரி மலையில் ஏராளமான அரிய வகை மூலிகைகள், பல்வேறு வகையான விலை உயர்ந்த மரங்கள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. இந்த மலையில் யானை, மான், சிறுத்தை, மயில் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மாலை கைலாசகிரி மலை, பரத்வாஜ் தீர்த்தம், முக்கந்தி கோவில் அருகே சமூக விரோதிகள் மது குடித்து, மழையில் இருந்த சருகுகளுக்கு தீ வைத்துள்ளனர். தீ மளமளவென மலை முழுவதும் பரவியது. இதனைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இரவு முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் பல ஏக்கரில் மூலிகை செடிகள், மரங்கள் தீயில் கருகி நாசமானது. தீயணைப்பு துறையினர் விடிய விடிய போராடி தீயை கட்டுப்படுத்தினர். கோடை காலங்களில் மலையில் ஏறும் சமூக விரோதிகள் அடிக்கடி இதுபோல் மலைகளுக்கு தீ வைப்பதால் செடி கொடிகள் மரங்கள் எரிந்து நாசமாகிறது. எனவே சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu