இணையவழியில் பழைய வாகனங்கள் விற்பனை - அசோக் லேலண்ட் அறிமுகம்

April 19, 2023

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், பயன்படுத்தப்பட்ட தனது வாகனங்களை, வாடிக்கையாளர்கள் விற்பனை செய்வதற்கும் / வாங்குவதற்கும் புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆர் இ ஏ எல் (Re AL) என்ற பெயரில் புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அசோக் லேலண்ட் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய லாரிகள் மற்றும் பேருந்துகளை கொடுத்துவிட்டு, புதிய லாரிகள் அல்லது பேருந்துகளை வாங்க வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷேனு […]

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், பயன்படுத்தப்பட்ட தனது வாகனங்களை, வாடிக்கையாளர்கள் விற்பனை செய்வதற்கும் / வாங்குவதற்கும் புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆர் இ ஏ எல் (Re AL) என்ற பெயரில் புதிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அசோக் லேலண்ட் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய லாரிகள் மற்றும் பேருந்துகளை கொடுத்துவிட்டு, புதிய லாரிகள் அல்லது பேருந்துகளை வாங்க வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பேசிய அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷேனு அகர்வால், “இதுவரை ஒழுங்குபடுத்தப்படாத பழைய வாகன விற்பனை துறையில், வெளிப்படை தன்மையை கொண்டு வர விரும்பியே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இணைய வழியில் மேற்கொள்வதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், அசோக் லேலண்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் மயமாக்கல் பயணத்தில் இந்த தளம் முக்கிய மைல்கல் ஆகும்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu