நிலவில் ஜப்பான் தனியார் நிறுவனத்தின் லேண்டர் - வரலாற்று நிகழ்வு

வரலாற்றில் முதல் முறையாக, தனியார் நிறுவனம் ஒன்று நிலவுக்கு லேண்டரை அனுப்பி உள்ளது. ஜப்பானைச் சேர்ந்த ஐ ஸ்பேஸ் தனியார் நிறுவனம், இதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது. இன்று, ‘ஹகுதோ’ லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. ஜப்பானிய மொழியில் ‘ஹகுதோ’ என்பதற்கு ‘வெள்ளை முயல்’ என்று பொருள். ஏற்கனவே, நிலவை சுற்றி வரும் விண்கலத்தில் இருந்து இந்த லேண்டர் தரையிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டர் வெளியேறும் என […]

வரலாற்றில் முதல் முறையாக, தனியார் நிறுவனம் ஒன்று நிலவுக்கு லேண்டரை அனுப்பி உள்ளது. ஜப்பானைச் சேர்ந்த ஐ ஸ்பேஸ் தனியார் நிறுவனம், இதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது.

இன்று, ‘ஹகுதோ’ லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது. ஜப்பானிய மொழியில் ‘ஹகுதோ’ என்பதற்கு ‘வெள்ளை முயல்’ என்று பொருள். ஏற்கனவே, நிலவை சுற்றி வரும் விண்கலத்தில் இருந்து இந்த லேண்டர் தரையிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிலோமீட்டர் உயரத்தில் லேண்டர் வெளியேறும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த லேண்டருடன் சேர்த்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘பொம்மை ரோபோ’ போன்ற ‘ரோவர்’ தரையிறங்க உள்ளது. இதுவரை, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய திட்டங்களை மேற்கொண்டுள்ளன. தற்போது நான்காவதாக, ஜப்பானின் தனியார் நிறுவனம் இணைந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu