வாட்ஸ்அப் செயலியை இனி ஒரே நேரத்தில் 4 சாதனங்களில் பயன்படுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ்அப் செயலியை ஒரே ஒரு செல்போனிலும், ஒன்றுக்கும் மேற்பட்ட டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரிலும் இணைத்து பயன்படுத்த முடியும். இதன் அடுத்த கட்டமாக ஒரே நேரத்தில் ஒரு வாட்ஸ்அப் கணக்கை 4 சாதனங்களில் பயன்படுத்தும் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதனை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் நேற்று அறிவித்துள்ளார். இந்த வசதி வரும் நாட்களில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வசதி தொழில்முனைவோருக்கு பயனுள்ளதாக இருக்கும். முதன்மை செல்போனில் வாட்ஸ்அப் கணக்கு நீண்ட நாட்கள் செயல்படாமல் இருந்தால், மற்ற செல்போன்களில் அந்த கணக்கை செயல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.














