வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள் - ஆய்வுத் தகவல்

April 26, 2023

காலநிலை மாற்றம் காரணமாக உலகம் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. தற்போது, பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை தாக்கம் காணப்படுகிறது. அந்த வகையில், வெப்ப அலையால் எந்தெந்த பகுதிகள் அதிகமாக பாதிப்படையும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளிவந்துள்ளன. அதன்படி, உலகின் மற்ற பகுதிகளை விட இந்த பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற இதழில் இந்த தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்யாவின் சில பகுதிகள், மத்திய […]

காலநிலை மாற்றம் காரணமாக உலகம் பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது. தற்போது, பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை தாக்கம் காணப்படுகிறது. அந்த வகையில், வெப்ப அலையால் எந்தெந்த பகுதிகள் அதிகமாக பாதிப்படையும் என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வெளிவந்துள்ளன. அதன்படி, உலகின் மற்ற பகுதிகளை விட இந்த பகுதிகளில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக உணரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற இதழில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

ரஷ்யாவின் சில பகுதிகள், மத்திய அமெரிக்கா, மத்திய ஐரோப்பா, சீனா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, வடமேற்கு அர்ஜென்டினா ஆகிய பகுதிகள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 ஆண்டுகளாக, இந்த பகுதிகளில் நிலவும் வெப்பநிலை மாற்றங்களை ஆராய்ந்து, இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பகுதிகளில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான எந்த சிறப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், பாதிப்பு அதிகமாக உணரப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu