செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு சார்ந்து, மேக் மை ட்ரிப் - மைக்ரோசாப்ட் இடையே ஒப்பந்தம்

சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்துடனான கூட்டமைப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. இந்நிலையில், செயற்கை தொழில்நுட்ப பயன்பாட்டை வேண்டி, மேக் மை ட்ரிப் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. சுற்றுலா துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்களை பெற வேண்டி இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய மொழிகளில், வாய்ஸ் மூலம் சுற்றுலா திட்டங்களை புக் செய்யும் வசதிக்காக, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, மைக்ரோசாப்ட் அசூர் - ஆல் […]

சாட் ஜிபிடி தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்துடனான கூட்டமைப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. இந்நிலையில், செயற்கை தொழில்நுட்ப பயன்பாட்டை வேண்டி, மேக் மை ட்ரிப் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. சுற்றுலா துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்களை பெற வேண்டி இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்திய மொழிகளில், வாய்ஸ் மூலம் சுற்றுலா திட்டங்களை புக் செய்யும் வசதிக்காக, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, மைக்ரோசாப்ட் அசூர் - ஆல் இயக்கப்படும் தளத்தில், கணினி, பயனர்களுடன் உரையாடி, அவர்களது விருப்பங்களுக்கு ஏற்ப சுற்றுலா பரிந்துரைகளை வழங்கும். மேலும், இதன் மூலம், மேக் மை ட்ரிப் தளத்தின் மொழி அறியும் திறன் பன் மடங்கு உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், இந்திய பயனர்களுக்கு சுற்றுலா திட்டங்களை வகுப்பது மிகவும் எளிதாகும் என மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் இணை தோற்றுநர் ராஜேஷ் மகோ தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu