பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது இந்த கைது நடவடிக்கை, பாகிஸ்தானிய மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள், வன்முறை தாக்குதலில் ஈடுபட துவங்கி உள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தானில் மக்கள் தொகை அதிகமாக உள்ள பஞ்சாப் மாகாணத்தில், வன்முறை சம்பவங்கள் அதிகரித்தன.
பஞ்சாப் மாகாணத்தில், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட 945 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் நடந்த வன்முறை தாக்குதல்களில், 130 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.