டாடா சன்ஸ் குழுமம் நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இன்று விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று மதியம் மகாராஷ்ட்ராவில் நிகழ்ந்துள்ளது. விபத்தின் போது அவரோடு அவரது காரில் நான்கு பேர் உடனிருந்துள்ளனர். அதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து அகமதாபாத்திலிருந்து மும்பை செல்லும் வழியில் ஏற்பட்டுள்ளது என்று காவல் துறை சார்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சைரஸ் மிஸ்திரி இறப்பிற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














