மெக்சிகோவில் கொரோனா அவசர நிலை முடிந்தது

May 11, 2023

மெக்சிகோவில் கொரோனா அவசர நிலை முடிவு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று சீனாவில் பரவிய பின்பு, கொரோனாவை பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. எனவே கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி மெக்சிகோ நாட்டில் கொரோனா அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் மெக்சிகோவில் உள்ள 95 […]

மெக்சிகோவில் கொரோனா அவசர நிலை முடிவு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று சீனாவில் பரவிய பின்பு, கொரோனாவை பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. எனவே கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதி மெக்சிகோ நாட்டில் கொரோனா அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் மெக்சிகோவில் உள்ள 95 சதவீதம் மக்கள் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு அதிகாரி ஹியூகோ லோபஸ்-கேடெல் கூறினார். இதையடுத்து உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி மெக்சிகோவில் கொரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வருவதாக மெக்ஸிகோ நாட்டு அரசு அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu