சுனில் ஷெட்டியின் உணவு விநியோக செயலி 'வாயு' தொடக்கம்

பிரபல நடிகர் சுனில் ஷெட்டி, வாயு என்ற உணவு விநியோக செயலியை தொடங்கி உள்ளார். வாயுவின் மிக முக்கிய முதலீட்டாளராக மற்றும் தூதராக இவர் உள்ளார். இந்த செயலின் மூலம், குறித்த நேரத்தில், மும்பையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உணவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே சந்தையை வியாபித்துள்ள ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற செயலிகளைக் காட்டிலும், 15% முதல் 20% வரை, வாயு செயலியில் விலைகள் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு விநியோகம் தொடர்பான […]

பிரபல நடிகர் சுனில் ஷெட்டி, வாயு என்ற உணவு விநியோக செயலியை தொடங்கி உள்ளார். வாயுவின் மிக முக்கிய முதலீட்டாளராக மற்றும் தூதராக இவர் உள்ளார். இந்த செயலின் மூலம், குறித்த நேரத்தில், மும்பையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உணவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே சந்தையை வியாபித்துள்ள ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற செயலிகளைக் காட்டிலும், 15% முதல் 20% வரை, வாயு செயலியில் விலைகள் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உணவு விநியோகம் தொடர்பான வாடிக்கையாளர்களின் நேரலை சிக்கல்களுக்கு இந்த செயலியில் தீர்வு கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

வாயு செயலியில், ஓட்டல்கள் மற்றும் உணவகங்களக்கு எந்தவித கமிஷனும் இன்றி உணவு ஆர்டர் வழங்கப்படுகிறது. மும்பையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் இதில் இணைந்துள்ளன. இந்த செயலிக்கு மாதம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில், கட்டணத்தை 2000 ரூபாய் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மும்பை தவிர இந்தியாவின் இதர முக்கிய நகரங்களிலும் இந்த செயலியை விரிவாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய அரசின் இணைய வர்த்தகத் தளமான ஒஎன்டிசியிலும் அங்கம் வகிக்க வாயு திட்டமிட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu