சுரங்கத் தொழில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் பிரபல நிறுவனமான வேதாந்தா, தனது 4ம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 67.5% சரிந்து பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 1881 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 5.4% சரிந்து 37225 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேதாந்தா நிறுவனத்தின் EBITDA மார்ஜின் 39% இருந்து 29% ஆக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில், இது 9362 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக, கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், EBITDA 22% சரிந்து 35241 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த கடன் மதிப்பு 66182 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த அறிக்கை வெளியானதும், மும்பை பங்குச்சந்தையில், வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் 2.3% சரிந்து வர்த்தகம் ஆகின்றன.














