பிலாஸ்பூர் – நாக்பூருக்கு இடையே மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை முதல்முறையாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடர்ந்து தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை முதல்முறையாக நிறுத்தப்பட்டுள்ளது. பிலாஸ்பூர் – நாக்பூருக்கு இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50% அளவுக்கே முன்பதிவு நடப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வந்தே பாரத் ரயிலானது செகந்திராபாத் – திருப்பதி இடையே இயக்கப்பட உள்ளது. செகந்திராபாத்-திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு மே 17 முதல் 16 பெட்டிகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














