மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அம்சங்கள் - ஆப்பிள் அறிவிப்பு

May 17, 2023

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தொழில்நுட்ப அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, பார்வை குறைபாடு, பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் இந்த அம்சங்கள் உள்ளன. 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைவருக்கும் உதவும் வகையில் இருக்க வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் தேவையானதை வழங்கும் படியே தொழில்நுட்பம் […]

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தொழில்நுட்ப அம்சங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக, பார்வை குறைபாடு, பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் இந்த அம்சங்கள் உள்ளன. 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைவருக்கும் உதவும் வகையில் இருக்க வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் தேவையானதை வழங்கும் படியே தொழில்நுட்பம் அமைய வேண்டும் என்பதை ஆப்பிள் உறுதியாக நம்புகிறது. அந்த வகையில், மேலும் பல மக்கள் தங்கள் கனவுகளை அடைவதற்கு வசதியாக புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வசதியாக, இமோஜிக்கள் மட்டுமே இடம்பெறும் கீபோர்டுகள், வீடியோ மெசேஜ் அனுப்பும் வசதி போன்றவை கொடுக்கப்படுகிறது. மேலும், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மேக்னிபையர் என்ற செயலி கொடுக்கப்படுகிறது. இதன் மூலம், பொருட்கள் மற்றும் புகைப்படங்களை எளிதாக பார்க்க முடியும். இது தவிர, பல்வேறு கூடுதல் அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu