2023 ஆம் நிதியாண்டில் வீடுகள் விற்பனை 48% உயர்வு

கடந்த 2023 ஆம் நிதியாண்டில், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 48% உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வீடு மனை வர்த்தகத்துறை ஆலோசனை நிறுவனமான அனாரோக், இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் நிதி ஆண்டில், சென்னை, தில்லி என் சி ஆர், கொல்கத்தா, மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 7 நகரங்களில் மட்டுமே 346960 கோடி மதிப்பில் வீடுகள் விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 234850 கோடியை விட […]

கடந்த 2023 ஆம் நிதியாண்டில், இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில், வீடுகள் விற்பனை 48% உயர்ந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வீடு மனை வர்த்தகத்துறை ஆலோசனை நிறுவனமான அனாரோக், இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் நிதி ஆண்டில், சென்னை, தில்லி என் சி ஆர், கொல்கத்தா, மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய 7 நகரங்களில் மட்டுமே 346960 கோடி மதிப்பில் வீடுகள் விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டின் 234850 கோடியை விட 48% உயர்வாகும்.

மேலும், அனரோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எண்ணிக்கை அடிப்படையில், வீடுகள் விற்பனையில் 36% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2022 ஆம் நிதி ஆண்டில், 277783 ஆக இருந்த வீடுகள் விற்பனை எண்ணிக்கை, 2023 ஆம் நிதி ஆண்டில் 379095 ஆக உயர்ந்துள்ளது. மேலும், டெல்லி என் சி ஆர், மும்பை, பெங்களூரு, புனே, ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில், முறையே 42%, 46%, 49%, 77%, 50%, 24%, 38% என்ற அளவில் வீடுகள் விற்பனை உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu