பொதுமக்கள் மின்சார வாகனங்களை அதிகமாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக, கடந்த 2019 ஏப்ரல் முதல், FAME II என்ற பெயரில் வேகமாக மின்சார வாகனங்களுக்கு பொதுமக்களை மாற்றும் திட்டத்தில் இந்திய அரசு ஈடுபட்டு வந்தது. அதன்படி, மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டம் வரும் 2024 மார்ச் வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது ஜூன் 1ம் தேதி முதல் வாகனங்களுக்கான மானியம் நிறுத்தப்படுவதாக மத்திய கனரக தொழிலக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
FAME II திட்டத்திற்காக 10000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மேலும், இருசக்கர வாகனங்களுக்கு 10000 ரூபாய் டிமாண்ட் இன்சென்டிவ் என்ற பெயரில் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த மானியம் நிறுத்தப்படுவதால், பொதுமக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும் வேகம் குறையலாம் என்ற வாதம் எழுந்துள்ளது.