இந்தியாவின் முன்னணி தனியார் எப்எம் ரேடியோ ஒளிபரப்பாளராக ரேடியோ சிட்டி உள்ளது. ரேடியோ சிட்டி கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த காலாண்டில், நிறுவனம் 12% வளர்ச்சியை பதிவு செய்து, 51.4 கோடி ரூபாய் மதிப்பில் வருவாயை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் EBITDA 10.6 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 73% உயர்வாகும்.
மேலும், 2023 ஆம் நிதி ஆண்டில், ஒட்டுமொத்தமாக, நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 18% அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, நிறுவனத்தின் வருவாய் 198.9 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் EBITDA 42.8 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 54% உயர்வாகும். மேலும், கடந்த ஆண்டில், ரேடியோ சிட்டி பல்வேறு மாநிலங்களில் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அத்துடன், ரேடியோ சிட்டி மேற்கொண்ட பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.