பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் 5ஜி திட்டங்களில், டிசிஎஸ் மற்றும் ஐடிஐ லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் 5ஜி சேவைகள், ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில், முறையே தொடங்கப்படும் என்று மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ தெரிவித்துள்ளார்.
“முதற்கட்டமாக, அடுத்த 2 வாரங்களுக்குள் 200 இடங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும். கிட்டத்தட்ட 3 மாத காலத்திற்கு சோதனை செய்யப்பட்டு, அதன் பிறகு, நாள் ஒன்றுக்கு 200 இடங்களில் 4ஜி சேவை விரிவு செய்யப்படும். அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும். இதற்காக, மென்பொருள் ரீதியாக சிறிய மாற்றம் மட்டுமே செய்ய வேண்டியுள்ளதால், தனிப்பட்ட கூடுதல் பணிகள் இருக்காது” - இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.