இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷின் என்ற இளைஞர், வெள்ளை மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளார். காவல் அதிகாரிகள் அவரை தடுத்து விசாரித்ததில், அதிபரை கொலை செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். எனவே, அவரது வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் வந்த ட்ரக் வாகனத்தில், ஆயுதங்களோ வெடிகுண்டுகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த சம்பவம் உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாய் வர்ஷின் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியதில், கடந்த 6 மாதங்களாக வெள்ளை மாளிகைக்குள் நுழைவது குறித்து அவர் திட்டமிட்டு வந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும், ‘வெள்ளை மாளிகையின் அதிகாரத்தை கைப்பற்றி, ஆட்சியில் அமர்வதே தனது குறிக்கோள்’ என்று அவரது குறிப்பேட்டில் எழுதி வைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.