உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, இதுவரையில், 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் ரஷ்ய வர்த்தகத்தை நிறுத்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான நிறுவனங்கள், ரஷ்யாவை விட்டு வெளியேறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது, கூடுதலாக 151 நிறுவனங்கள் வெளியேற உள்ளதாகவும், 175 நிறுவனங்கள் வெளியேறுவதற்கு அவகாசம் கோருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
அண்மையில், வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது ரஷ்ய வர்த்தகத்தை விற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, தனது 4000 ஊழியர்களுடன் சேர்த்து, ரஷ்ய வர்த்தகத்தை விற்பனை செய்தது. அதனைத் தொடர்ந்து, பல நிறுவனங்களின் ரஷ்ய வர்த்தக நிறுத்தம் தொடர்பான செய்திகள் ஆராயப்பட்டு, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.