உலகின் மிகவும் பழமையான மனித கால் தடம் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து, ஆப்பிரிக்காவில் மொத்தம் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனித கால் தடங்கள் 14 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, 50000 ஆண்டுகள் பழமையான கால் தடங்கள் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவில் 5 இடங்களிலும், தெற்கு ஆப்பிரிக்காவில் 9 இடங்களிலும் இதுபோன்ற கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, உலக அளவில் மேலும் 10 இடங்களில் பழங்கால மனித கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கால் தடங்களை ஆராய்ச்சி செய்தலில், தற்போது கண்டறியப்பட்ட பழமையான கால் தடம் 153000 வருடங்கள் பழமையானதாக சொல்லப்பட்டுள்ளது. எனவே, இது ஹோமோ செப்பியன்ஸ் எனப்படும் மனிதர்களுடையதாக சொல்லப்பட்டுள்ளது. இவை தவிர, கிழக்கு ஆப்பிரிக்க பகுதியில் 3.66 மில்லியன் ஆண்டுகள் வரை பழமையான கால் தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.