கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் 23% உயர்ந்து, 937 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், வங்கியின் மொத்த பரிவர்த்தனை மதிப்பு 8% உயர்ந்து, 96369 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான என் காமகோடி இந்த விவரங்களை அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட தகவல்கள் படி, சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வைப்புத்தொகை 10% உயர்ந்து 52398 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், வங்கியின் கடன் மதிப்பு 7% உயர்ந்து, 43971 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், வங்கியின் மொத்த லாபம் 14% உயர்ந்து, 1818 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், வங்கிக்கு வட்டி மூலம் கிடைக்கும் வருமானம் 13% உயர்ந்து, 2163 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் மொத்த மதிப்பு 7421 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த வாராக் கடன் 4.37% ஆக குறைந்துள்ளது.














