மோசமான வானிலை காரணமாக பெரு நாட்டில் அவசர நிலை பிரகடனம்

மோசமான வானிலை காரணமாக பெரு நாட்டில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில் எல்நினோ விளைவு காரணமாக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த பாதிப்புகளை சமாளிக்கும் திறன் அரசின் பல துறைகளுக்கு இல்லை என கூறப்படுகிறது. எனவே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் அதிகம் […]

மோசமான வானிலை காரணமாக பெரு நாட்டில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில் எல்நினோ விளைவு காரணமாக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் இந்த பாதிப்புகளை சமாளிக்கும் திறன் அரசின் பல துறைகளுக்கு இல்லை என கூறப்படுகிறது. எனவே தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட துறைகள் இணைந்து செயல்பட அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாகாணங்களில் உள்ள 131 மாவட்டங்களில் அடுத்த 60 நாட்களுக்கு அவசர நிலையை அறிவித்து பெரு அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu