அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனம் தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 70% உயர்ந்து, 389 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 17% உயர்ந்து, 3031 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 28% உயர்ந்து, 1570 கோடியாக உள்ளது.
மேலும், நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக அணில் சர்தனா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மே 10 முதல், அடுத்த 5 ஆண்டுகளுக்கு, அவர் பதவி வகிப்பார். நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி அதன் புதிய உத்திகள் மற்றும் திட்டங்கள் மூலமாக கிடைத்ததாக அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் நிர்வாகக் குழு சந்திப்பில், ‘அதானி ட்ரான்ஸ்மிஷன்’ என்ற நிறுவனத்தின் பெயரை, ‘அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ்’ என்று மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த கட்ட ஒப்புதல்களுக்கு பெயர் மாற்ற படிவம் அனுப்பப்பட்டுள்ளது.