கடந்த 2004 ஆம் ஆண்டு, மிகப்பெரிய சுனாமி உலகை தாக்கியது. இதில், லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போதைய நிலையில், சுனாமி தாக்க உள்ளதை முன்கூட்டியே கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருவிகள் இல்லை. அதை நோக்கி பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு, தற்போது, ‘கார்டியன்’ என்ற பெயரில், நாசா புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளது.
கார்டியன் சாதனம் உயிர் காக்கும் அலாரமாக சொல்லப்படுகிறது. இந்த சாதனத்தால், 10 நிமிடங்களில் சுனாமியின் தாக்கம் குறித்த புகைப்படத்தை உருவாக்க முடியும். மேலும், ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக எச்சரிக்கை செய்ய முடியும். GUARDIAN (GNSS upper atmospheric real-time disaster information and alert network) கருவி செயற்கைக்கோள் தரவுகள் மூலம் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.