ஒடிசா ரெயில் விபத்து காரணமாக 2 அதிவேக விரைவு ரெயில்கள் ரத்து

ஒடிசா ரெயில் விபத்து காரணமாக 2 அதிவேக விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரெயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக விரைவு ரெயில் ஆகியவை கடந்த 2-ந் தேதியன்று ஒடிசா பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. அதனால் தென்னக ரெயில்வே ரெயில் சேவையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து 5-ந் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் ஹவுரா அதிவிரைவு மெயில் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இன்று காலை […]

ஒடிசா ரெயில் விபத்து காரணமாக 2 அதிவேக விரைவு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

ஷாலிமார்-சென்னை கோரமண்டல் விரைவு ரெயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக விரைவு ரெயில் ஆகியவை கடந்த 2-ந் தேதியன்று ஒடிசா பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. அதனால் தென்னக ரெயில்வே ரெயில் சேவையில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து 5-ந் தேதி இரவு 7.20 மணிக்கு புறப்படும் ஹவுரா அதிவிரைவு மெயில் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு புர்லியாவில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் செல்லும் வாரம் இருமுறை அதிவேக விரைவு ரெயில் ரத்து செய்யப்படுகிறது. மேலும் அதன் அடிப்படையில் 123 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், 56 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்றும் ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu