சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், இன்று, ஆப்பிள் நிறுவனத்தின் மிக்ஸ்ட் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, மெட்டா நிறுவனத்தின் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டுக்கு போட்டியாக வெளிவர உள்ளது. இதன் மூலம், ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனத்திற்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு, ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட தாக்கம், இந்த ஹெட்செட் மூலமாகவும் ஏற்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஹெட்செட் 3000 டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது. அதே வேளையில், மெட்டா நிறுவனத்தின் ஹெட்செட் 500 டாலர்கள் என கூறப்பட்டுள்ளது.