நடப்பு நிதயாண்டில் இந்திய விமானப் போக்குவரத்து துறை 15000 - 17000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கும் - ஆய்வறிக்கை

September 8, 2022

நடப்பு நிதயாண்டில் இந்திய விமானப் போக்குவரத்து துறையின் இழப்பு 15000 - 17000 கோடி ரூபாய் வரையில் இருக்கக்கூடும் என்று, பிரபல மதிப்பீட்டு நிறுவனமான ஐக்ரா, தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. விமானப் போக்குவரத்துக்கான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாலும், ரூபாய் மதிப்பில் காணப்படும் சரிவினாலும், விமானப் போக்குவரத்து துறையில் இழப்பு நேரிடும் என்று அந்த நிறுவனம் கணித்துள்ளது. இந்தியாவில், விமானப் போக்குவரத்துக்காக செலவிடப்படும் தொகையில், 45% எரிபொருள் தேவைகளுக்கானதாகும் என்று சுட்டிக்காட்டி உள்ள அந்த நிறுவனம், மொத செலவினத்தில் […]

நடப்பு நிதயாண்டில் இந்திய விமானப் போக்குவரத்து துறையின் இழப்பு 15000 - 17000 கோடி ரூபாய் வரையில் இருக்கக்கூடும் என்று, பிரபல மதிப்பீட்டு நிறுவனமான ஐக்ரா, தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்துக்கான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாலும், ரூபாய் மதிப்பில் காணப்படும் சரிவினாலும், விமானப் போக்குவரத்து துறையில் இழப்பு நேரிடும் என்று அந்த நிறுவனம் கணித்துள்ளது. இந்தியாவில், விமானப் போக்குவரத்துக்காக செலவிடப்படும் தொகையில், 45% எரிபொருள் தேவைகளுக்கானதாகும் என்று சுட்டிக்காட்டி உள்ள அந்த நிறுவனம், மொத செலவினத்தில் 35 - 50% மட்டுமே அமெரிக்க டாலர்களில் செலவிடப்படுகிறது என்று கூறியுள்ளது. எனவே, மீதமுள்ள செலவினங்கள் இந்திய ரூபாயில் மேற்கொள்ளப்படுவதால் இழப்புகள் அதிகமாகும் என்று தெரிவித்துள்ளது.

அதே வேளையில், இந்தியாவில் விமான போக்குவரத்து 57.7% அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. தற்போது, 84.2 மில்லியன் அளவில் விமான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் இது மேலும் 2.04% அதிகரித்து, 32.5 மில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கொரோனாவுக்கு முந்தைய நிலவரத்தை விட 7% குறைவாகும். முழுமையாக பழைய நிலை திரும்பினால், உள்நாட்டு விமான போக்குவரத்து 52 முதல் 54 சதவீதம் அதிகரிக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட, தற்போது விமானக் கட்டணங்கள் 25-30% உயர்ந்துள்ளது. எனவே, 15000 - 17000 கோடி ரூபாய் வரையில் இழப்பு நேரிடலாம் என்று அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் சுமை குறைந்தால், இந்திய விமானப் போக்குவரத்து துறை சற்று முன்னேற்றத்தை சந்திக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில் விமான போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு 23000 கோடி ரூபாயாக இருந்தது. மேலும், நடப்பு நிதி ஆண்டின் முடிவில், விமான போக்குவரத்து துறையின் கடன் மதிப்பு ஒரு லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இண்டிகோ நிறுவனம் 1064 கோடி ரூபாயும், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 789 கோடி ரூபாயும் இழப்பு நேரிட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu