இந்தியாவில் மெட்டா வெரிஃபைட் அறிமுகம்

June 8, 2023

ட்விட்டரைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் தனது ப்ளூ டிக் சேவையை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா வெரிஃபைட் என்று அறியப்படும் இந்த கட்டண சந்தா சேவை, தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கணினிகளில் மெட்டா வெரிஃபைடு சேவையைப் பெற 599 ரூபாய் கட்டணமும், கைபேசிகளில் மெட்டா வெரிஃபைடு சேவையைப் பெற 699 ரூபாய் கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். மெட்டா வெரிஃபைடு வசதிகளைப் பெற, பேஸ்புக் […]

ட்விட்டரைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் தனது ப்ளூ டிக் சேவையை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா வெரிஃபைட் என்று அறியப்படும் இந்த கட்டண சந்தா சேவை, தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கணினிகளில் மெட்டா வெரிஃபைடு சேவையைப் பெற 599 ரூபாய் கட்டணமும், கைபேசிகளில் மெட்டா வெரிஃபைடு சேவையைப் பெற 699 ரூபாய் கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

மெட்டா வெரிஃபைடு வசதிகளைப் பெற, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அத்துடன், அரசாங்கப் புகைப்பட அடையாள அட்டையை சமர்ப்பித்தால் மட்டுமே இந்த அம்சம் கொடுக்கப்படும். அதன்படி, மெட்டா வெரிஃபைட் பயனர் ஒருவருக்கு, அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பெயரும், அடையாள அட்டையில் உள்ள பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் கொடுக்கப்படுகிறது. மெட்டா வெரிஃபைட் பயனர்களின் பதிவுகளுக்கு அதிக ரீச் கிடைக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu