அரசுப் பேருந்துகளில் விரைவில் இ-டிக்கெட் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 2,000 பேருந்துகளை வாங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் 2,400 பேருந்துகள் வாங்கப்படும். அவற்றில் 430 தாழ்தளப் பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது.
இது தொடர்பாக போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சென்னை மாநகர அரசுப் பேருந்துகளில் இ-டிக்கெட் மூலம் பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்த, தானியங்கி கருவிகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் அது நடைமுறைக்கு வரும். தொடர்ந்து மற்ற இடங்களிலும் இது விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.














