ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் 20 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்களை அனுப்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இதனால் ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியது. அந்நாட்டுக்கு 50 ஆயிரம் மெட்ரிக்டன் கோதுமை வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது.
இந்நிலையில் உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை அனுப்புகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில் 10 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்களுடன் சேர்த்து கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் என 20 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் அனுப்பப்படுகின்றன.