கடந்த மார்ச் மாதத்தில், சிட்டி குழுமம் மிகப்பெரிய பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. அதை தொடர்ந்து, தற்போது, மேலும் 50 பணியிடங்களை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, முதலீட்டு வங்கி நடவடிக்கைகள் தொடர்பான 30 பணியிடங்களும், கார்ப்பரேட் வங்கி நடவடிக்கைகள் தொடர்பான 20 பணியிடங்களும், நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லண்டனில் இந்த பணி நீக்கங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பணி நீக்கங்கள், வங்கியின் செலவுகளை குறைப்பதில் மிகவும் முக்கியமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்டி குழுமம், தனது வெளிநாட்டு நாணய சந்தை தொடர்பான சர்வதேச குழுவையும் கலைக்க உள்ளதாக கூறியுள்ளது. சிட்டி நிறுவனம், தற்போது அறிவித்துள்ள இந்த பணி நீக்கம், நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 1% க்கும் குறைவானதாகும். தற்போதைய நிலையில் சிட்டி குழுமத்தில் 240000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.