டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டில் அணையில் போதிய தண்ணீர் இருப்பதால், உரிய காலமான ஜூன் 12-ம்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி மேட்டூர் அணையில் நேற்று காலையில் பிரதான மதகுகளை இயக்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். […]

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டில் அணையில் போதிய தண்ணீர் இருப்பதால், உரிய காலமான ஜூன் 12-ம்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதன்படி மேட்டூர் அணையில் நேற்று காலையில் பிரதான மதகுகளை இயக்கி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், நடப்பு ஆண்டில் ரூ.75.95 கோடியில் குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை அறிவிக்கிறேன்.

இத்திட்டத்தின்கீழ், ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ டிஏபி, 25 கிலோ பொட்டாஷ் என்ற விகிதத்தில், 2.50 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்திலும், 1.24 லட்சம் ஏக்கருக்கு தேவையான நெல் விதைகள் 50 சதவீத மானியத்திலும், 15,818 ஏக்கருக்கு மாற்றுப் பயிர் சாகுபடி தொகுப்பும், 6,250 ஏக்கரில் பசுந்தாள் விதைகளும், 747 பவர் டில்லர்களும், 15 பவர் வீடர்களும் மானியத்தில் விநியோகம் செய்யப்படும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu