மீண்டும் கடன் வாங்கும் திட்டத்தில் அதானி குழுமம்

June 14, 2023

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர், முதலீட்டாளர்களிடம் தனது நம்பிக்கையை மீட்டெடுக்க, தனது அனைத்து கடன்களையும் அதானி குழுமம் திருப்பிச் செலுத்தி வந்தது. பல்வேறு கடன் தொகைகளை முதிர்வு காலத்திற்கு முன்பே திருப்பிச் செலுத்தி வந்தது. இந்நிலையில், அதானி குழுமம் மீண்டும் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடனைப் பெற, ஸ்டாண்டர்ட் சார்ட்டட், டியூட்சே வங்கி, பார்க்லேஸ், மிட்சுபிஷி பைனான்சியல் குரூப் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர், முதலீட்டாளர்களிடம் தனது நம்பிக்கையை மீட்டெடுக்க, தனது அனைத்து கடன்களையும் அதானி குழுமம் திருப்பிச் செலுத்தி வந்தது. பல்வேறு கடன் தொகைகளை முதிர்வு காலத்திற்கு முன்பே திருப்பிச் செலுத்தி வந்தது. இந்நிலையில், அதானி குழுமம் மீண்டும் கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடனைப் பெற, ஸ்டாண்டர்ட் சார்ட்டட், டியூட்சே வங்கி, பார்க்லேஸ், மிட்சுபிஷி பைனான்சியல் குரூப் உள்ளிட்ட பல நிறுவனங்களிடம் அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதானி குழுமம், நேரடி கடனாக அல்லாமல், நீண்ட கால அடிப்படையில் கடன் வாங்குவதற்கு ஏதுவாக, கடன் பத்திரங்களாக பெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்த பெறப்பட்ட 3.8 பில்லியன் டாலர் கடன் தொகையை, கடன் பத்திரங்களாக மாற்றுவதற்கு அதானி குழுமம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu