கடனில் தத்தளிக்கும் வோடபோன் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அரசு முடிவு

September 9, 2022

வோடபோன் நிறுவனத்தின் பங்கு விலை 10 ரூபாய் அல்லது அதற்கு மேலாக நிலைபெறும் பொழுது அரசாங்கம் வோடபோன் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கடனில் தத்தளிக்கும் வோடபோன் நிறுவனம் காப்பாற்றப்படும் என்று நம்பப்படுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல், வோடபோன் நிறுவனத்தின் பங்குகள் பத்து ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று, வோடபோன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மேலும் 0.82% குறைந்து, 9.69 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதனால், நிறுவனத்தின் பங்குகளை அரசிடம் […]

வோடபோன் நிறுவனத்தின் பங்கு விலை 10 ரூபாய் அல்லது அதற்கு மேலாக நிலைபெறும் பொழுது அரசாங்கம் வோடபோன் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், கடனில் தத்தளிக்கும் வோடபோன் நிறுவனம் காப்பாற்றப்படும் என்று நம்பப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல், வோடபோன் நிறுவனத்தின் பங்குகள் பத்து ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமாகி வருகின்றன. நேற்று, வோடபோன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மேலும் 0.82% குறைந்து, 9.69 ரூபாய்க்கு வர்த்தகமானது. இதனால், நிறுவனத்தின் பங்குகளை அரசிடம் விற்க வோடபோன் முன்வந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் கடன் சுமையை நீக்கும் விதமாக, அரசுக்கு செலுத்த வேண்டிய 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகையை, பங்குகளாக விற்க வோடபோன் முடிவெடுத்துள்ளது. இது நிறுவனத்தின் 33 சதவீத பங்கு மதிப்பு ஆகும். பங்குகளை அரசாங்கம் கையகப்படுத்தியதன் பின்னர், நிறுவனத்திற்குச் சொந்தமான பங்கு மதிப்பு 74.99 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறையும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய வோடபோன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “ஒரு பங்கின் விலை, அரசு நிர்ணயித்துள்ள 10 ரூபாய் விளிம்பைத் தாண்டிய பிறகு தான் அரசாங்கம் அதைப் பெற வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. இருப்பினும், அரசின் முடிவை ஏற்கிறோம். கூடிய விரைவில், நிறுவனத்தின் பங்குகள் அரசிடம் சென்றடையும் என்று நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே, ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்குப் பின்னர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்திற்கும், கடன் தொகையைத் திருப்பித் தர, அரசாங்கம் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu