நைஜீரியாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து 103 பேர் பலி

June 15, 2023

நைஜீரியாவில் மக்கள் படகில் திருமணத்திற்காக கூட்டமாக சென்ற போது படகு ஆற்றில் கவிழ்ந்து 103 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் நைஜர் பகுதியில் திருமணத்துக்காக குவாராவில் இருந்து மணமக்களின் உறவினர்கள் சென்றிருந்தனர். திருமணம் முடிந்த பின்னர் தங்களது சொந்த ஊருக்கு 300-க்கும் மேற்பட்டோர் படகில் சென்றனர். அப்போது பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். […]

நைஜீரியாவில் மக்கள் படகில் திருமணத்திற்காக கூட்டமாக சென்ற போது படகு ஆற்றில் கவிழ்ந்து 103 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் நைஜர் பகுதியில் திருமணத்துக்காக குவாராவில் இருந்து மணமக்களின் உறவினர்கள் சென்றிருந்தனர். திருமணம் முடிந்த பின்னர் தங்களது சொந்த ஊருக்கு 300-க்கும் மேற்பட்டோர் படகில் சென்றனர். அப்போது பாரம் தாங்காமல் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 103 பேர் பலியாகினர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu