சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் பில்கேட்ஸ்

June 16, 2023

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பில்கேட்ஸ் சந்திக்கிறார். கோவிட் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு சீனாவிற்கு பல மேற்கத்திய தலைவர்கள் வருகை புரிகின்றனர். இப்பொழுது உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான அமெரிக்காவின் பில் கேட்ஸ் வருகை தந்துள்ளார். அமெரிக்க நாட்டு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிறன்று சந்திக்க இருக்கும் பின்னணியில் இது மிகவும் முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்காக […]

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பில்கேட்ஸ் சந்திக்கிறார்.

கோவிட் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு சீனாவிற்கு பல மேற்கத்திய தலைவர்கள் வருகை புரிகின்றனர். இப்பொழுது உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரான அமெரிக்காவின் பில் கேட்ஸ் வருகை தந்துள்ளார்.

அமெரிக்க நாட்டு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிறன்று சந்திக்க இருக்கும் பின்னணியில் இது மிகவும் முக்கிய சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மலேரியா மற்றும் காசநோய் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் முயற்சிகளுக்காக சீனாவிற்கு இந்த அறக்கட்டளை 50 மில்லியன் டாலர் வழங்கும். உலகின் ஏழை மக்களை தாக்கும் நோய்கள் ஒழிப்பிற்காக எடுக்கப்படும் உயிர்காக்கும் சிகிச்சை முறைகள் மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டுக்கான வழிமுறைகளுக்கு இந்த தொகை உறுதுணையாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu