இன்போசிஸ் நிறுவனம் 454 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான 5 ஆண்டுகால ஒப்பந்தத்தை வென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. டன்ஸ்கே வங்கியின் செயல்பாடுகளை டிஜிட்டல் மயம் ஆக்கும் ஒப்பந்தத்தை இன்போசிஸ் வென்றுள்ளது. இதற்காக, பெங்களூருவில் உள்ள டன்ஸ்கே வங்கியின் 1400 ஊழியர்கள் உட்பட தகவல் தொழில்நுட்ப மையத்தை இன்போசிஸ் கையகப்படுத்துகிறது. மேலும், இந்த ஒப்பந்தம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒப்பந்தங்களில் மிகவும் முக்கியமானதாக சொல்லப்பட்டுள்ளது.
கடந்த வாரம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பிரிட்டனின் முக்கிய ஒப்பந்தத்தை கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, இன்று, இன்போசிஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது. எனவே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடையே போட்டி நீடித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.