ஜூலை 1 முதல் ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி இணைப்பு - தீபக் பாரேக் அறிவிப்பு

June 27, 2023

வரும் ஜூலை 1ம் தேதி முதல், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை இணைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹெச்டிஎஃப்சி சேர்மன் தீபக் பாரேக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ஜூன் 30 ம் தேதி, இரு நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெறும் என்று கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது, ஒற்றை நிறுவனத்திற்கான பங்குகள் பிரிக்கப்பட்டு, இறுதி ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான பின்னர், இன்றைய பங்குச்சந்தையில் எச்டிஎப்சி குழும […]

வரும் ஜூலை 1ம் தேதி முதல், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை இணைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹெச்டிஎஃப்சி சேர்மன் தீபக் பாரேக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ஜூன் 30 ம் தேதி, இரு நிறுவனங்களின் நிர்வாக குழு உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெறும் என்று கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது, ஒற்றை நிறுவனத்திற்கான பங்குகள் பிரிக்கப்பட்டு, இறுதி ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு வெளியான பின்னர், இன்றைய பங்குச்சந்தையில் எச்டிஎப்சி குழும பங்குகள் 2.5% வரை உயர்வை சந்தித்துள்ளன.

வரும் ஜூலை 13ஆம் தேதி முதல், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி என்று இரு வேறு நிறுவனங்களாக பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள், ஒற்றை பெயரில், ஒரே நிறுவனமாக பட்டியலிடப்படும். அது, ஜூலை 17ஆம் தேதி முதல் வர்த்தகத்தை தொடங்கும். மேலும், இணைக்கப்பட்ட ஒற்றை நிறுவனத்தின் சொத்து மதிப்பு 18 லட்சம் கோடியாக இருக்கும். - இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu