அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2032 ஆம் ஆண்டில், நிலவின் மண் பகுதியில் உள்ள கனிம வளங்களை குறித்து நாசா ஆராய்ச்சி செய்ய உள்ளது. முதற்கட்டமாக, ஆர்டெமிஸ் திட்டத்தை செயல்படுத்தி, அதன் பிறகு, நிலவில் ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை பெருக்குவதற்கான ஆராய்ச்சியில் இறங்க உள்ளது. அத்துடன், நிலவின் நிலப்பகுதியில் கிடைக்கும் பல்வேறு கனிமங்களை நோக்கி ஆராய்ச்சி செய்ய உள்ளது. இதற்காக, நாசா, வர்த்தக முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக நாசா விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலவின் நிலப்பகுதியை சுரண்டி, அங்கு எந்தெந்த கனிமங்கள் இருக்கும் என்று முதற்கட்டமாக கண்டறியப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக, நிலத்தில் சுரங்கம் போன்ற ஆழமான குழி தோண்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நாடுகள் நிலவுக்கு ரோவர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளன. இந்த ரோவர்கள் மூலம், நிலவின் மண் பகுதி எடுத்துவரப்பட்டு ஆராய்ச்சி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.