செவ்வாய் கிரகத்தில் டோனட் வடிவ பாறை - நாசா புகைப்படம் பகிர்வு

கடந்த ஜூன் 23ஆம் தேதி, நாசாவின் செவ்வாய் கிரக ரோவர், டோனட் வடிவ பாறை ஒன்றை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட நாசாவின் ரோவர், செவ்வாய் கிரகத்தில் இருந்து பல்வேறு புகைப்படங்களை அனுப்பியுள்ளது. அதில், செவ்வாய் கிரக பள்ளத்தாக்குகள், புழுதி புயல்கள், பாறைகள் உள்ளிட்டவை அடங்கும். ஆனால், தற்போது அனுப்பப்பட்டுள்ள புகைப்படத்தில், பாறையானது டோனட் வடிவில் அமைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புகைப்படத்தில், வட்ட வடிவத்தில், […]

கடந்த ஜூன் 23ஆம் தேதி, நாசாவின் செவ்வாய் கிரக ரோவர், டோனட் வடிவ பாறை ஒன்றை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட நாசாவின் ரோவர், செவ்வாய் கிரகத்தில் இருந்து பல்வேறு புகைப்படங்களை அனுப்பியுள்ளது. அதில், செவ்வாய் கிரக பள்ளத்தாக்குகள், புழுதி புயல்கள், பாறைகள் உள்ளிட்டவை அடங்கும். ஆனால், தற்போது அனுப்பப்பட்டுள்ள புகைப்படத்தில், பாறையானது டோனட் வடிவில் அமைந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புகைப்படத்தில், வட்ட வடிவத்தில், டோனட் போன்ற பெரிய பாறை ஒன்று உள்ளது. அதனைச் சுற்றி சிறு சிறு பாறைகள் சிதறிய வண்ணம் உள்ளன. ரோவரில் உள்ள சூப்பர் கேமரா மூலம் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நாசா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பாறை இந்த வடிவத்திற்கு மாறியதற்கான காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu