பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் - இந்திய சட்ட ஆணையம் 

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அதேவேளையில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 22-வது இந்திய […]

பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.

அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரே சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அதேவேளையில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 22-வது இந்திய சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்களிடமும், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடமும் இருந்து கருத்துகளையும், யோசனைகளையும் பெற தீர்மானித்துள்ளது. எனவே இந்த சட்டம் தொடர்பாக கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்க விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதிக்குள் membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu