மணிப்பூரில் இணையதள சேவைக்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த மாதம் 3-ந் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் ஏற்பட்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ந் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த வகையில் மணிப்பூரில் ஜூலை 5 ஆம் தேதி வரை இணையதள சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இணைய சேவை தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து நீடிப்பதையடுத்து, கலவரங்களை கட்டுப்படுத்தும் வகையில் இணையதள சேவை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.














